2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

உலக உணவு தின நிகழ்வு

Editorial   / 2019 ஒக்டோபர் 16 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.ஏ.றமீஸ்

சர்வதேச ரீதியில் ஒக்டோபர் 16ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டு வரும் உலக உணவு தினத்தையொட்டி, அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு ஊர்வலம், அதிபர் ஏ.எல்.கமறுதீன் தலைமையில், இன்று (16) நடைபெற்றது.

“ஆரோக்கியமான உணவு பசியற்ற உலகுக்கு” எனும் தொனிப்பொருளின் கீழ் நடைபெற்ற இந்த ஊர்வலத்தின்போது, உயிர் வாழ்வதற்குத் தேவையான உணவை முறையாக பெற்றுக்கொண்டு, அதனை உட்கொள்ள வேண்டியதன் அவசியம் பற்றியும், முறையற்ற உணவுப் பழக்க வழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பதாதைகளை ஏந்தியவாறு மாணவர்கள் மேற்கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X