2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

உலருணுவுப் பொதிகள் விநியோகம்

Editorial   / 2020 ஏப்ரல் 05 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகா

சுவிஸ்  சூரிச் சிவனாலயத்தின் 'அன்பேசிவம் ' அமைப்பினரால், கொரோனா நெருக்கடிக்குள்ளான மக்களுக்கு, உலருணவு வழங்கும் திட்டத்தை, அம்பாறை மாவட்டத்தில் ஆரம்பித்துள்ளனர்.

அன்பேசிவம் அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் இளம்விஞ்ஞானி சோ.வினோஜ்குமாரின் ஏற்பாட்டில், வளத்தாப்பிட்டி, பளவெளி கிராம மக்களுக்கு உலருணவுப் பொதிகள், நேற்று(4) வழங்கிவைக்கப்பட்டன.

பளவெளி ஆதிசிவனாலயத்திலும் வளத்தாப்பிட்டி நாகதம்பிரான் ஆலயத்திலும் நடைபெற்ற விசேட பூஜையின் பின்னர் கோவில் தலைவர்களான எஸ்.துரைசிங்கம், வி.ஜெயச்சந்திரன், எஸ்.வடிவேல், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தலைவர் சோ.  தினேஸ்குமார் உள்ளிட்டோர் நிவாரணப்பொதியை வழங்கிவைத்தனர்.

கிராமசேவை உத்தியோகத்தர் எஸ்.ரவி பொதுச் சுகாதார பரிசோதகர் பி.இளங்கோ உள்ளிட்ட அலுவலர்கள் முன்னிலையில் 200 ;பொதிகள் மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .