2025 மே 14, புதன்கிழமை

உலர் உணவுகள் வழங்கி வைப்பு

Editorial   / 2020 மே 15 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எல்.எஸ்.டீன்

அக்கரைப்பற்று மாநகர சபை, அக்கரைப்பற்று பிரதேச சபை போன்றவற்றில் ஊரடங்குச் சட்டத்தால் நிர்க்கதியான பொதுமக்களுக்கு, அக்கரைப்பற்று இஸ்லாமிய அழைப்பு வழிகாட்டல் மய்யத்தால் உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதன் மற்றுமொரு அங்கமாக, மேற்படி மய்யத்தின் தலைவர் மௌலவி எம்.ஐ.அன்சார் தலைமையில், ஆலையடிவேம்பு பிரதேச செயலக எல்லைக்குள் வாழும் பௌத்த மதத்தைச் சேர்ந்த சுமார் 50 குடும்பங்களுக்கு மௌலவி எம்.ஐ.அன்சார், பொலிஸ் உத்தியோகத்தர் ஆகியோர் கலந்துகொண்டு உலர் உணவுப் பொருள்களை வழங்கினர்.

அக்கரைப்பற்று விஹாரையில் நேற்று (14)  நடைபெற்ற இந் நிகழ்வில், அக்கரைப்பற்று சிறி விஜேராமய மகா விஹாராதிபதி தேவகொட சோரத தேரர், பிரதேச மக்கள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X