2024 மே 03, வெள்ளிக்கிழமை

உல்கிட்டு ஓயாவில் பாரிய மண் அகழ்வு ; சுற்றுச்சூழல் பாதிப்பு

Janu   / 2023 நவம்பர் 27 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை - தெஹியத்தக்கண்டிய பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட இகலகம கிராமசேவகர் பிரிவில் அமைந்துள்ள வஸ்கமுவ தேசிய வனாந்தரம் மற்றும் மதுறு ஓயா தேசிய வனாந்தர பகுதியிலுள்ள அலிமங்கட உல்கிட்டு ஓயா ஆற்றில் பாரிய மண் அகழ்வு தொழிற்சாலைகள் நடத்திச் செல்லப்படுவதால் பிரதேசத்தை அண்டியுள்ள கிராமப்புற மக்கள் பாரிய சுற்றுச் சூழல் விளைவுகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த ஆற்றில் 15 - 20 அடி ஆழத்திற்குக் குழிகள் தோண்டப்பட்டு இரும்பு தண்டவாளங்கள் மூலம் கொள்கலன் பயன்பாட்டில் ஆற்று மண் சேகரிக்கப்படும் பாரிய தொழிற்சாலைகள் முன்னெடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

மண் அகழ்வு உரிமத்தின் நிபந்தனைகள் மீறப்பட்டு இப்பாரிய ஆற்று மண் அகழ்வு இடம்பெறுவதால் இவ்வனாந்தர பகுதியில்

சுதந்திரமாக உலவித்திரியும் 200ற்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கிராமத்திற்குள் உட்புகுந்து பயன்தரும் மரங்களையும்,சேனைப் பயிர் வகைகளையும் அழிப்பதோடு, உயிர்களுக்கும் உடமைகளுக்கும் தொடர்ச்சியாகச் சேதத்தை விளைவிக்கின்றன.

யானைகள் கிராமத்திற்குள் உட்புகுவதனை தடுக்கும் யானை வேலிகள் உடைக்கப்பட்டுள்ளமையாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக கிராமவாசிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

அஸ்ஹர் இப்றாஹிம் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .