2025 மே 12, திங்கட்கிழமை

உளவியல் ஆலோசனை மய்ய அங்குரார்ப்பண நிகழ்வு

வி.சுகிர்தகுமார்   / 2019 டிசெம்பர் 03 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அம்பாறை மாவட்டத்துக்கான உளவியல் ஆலோசனை மய்ய அங்குரார்ப்பண நிகழ்வு, ஆலையடிவேம்பு பிரதேச சபை கலாசார மண்டபத்தில் நேற்று (02) நடைபெற்றது.

உளவியல் ஆலோசனை மையத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் க.கிருஸ்ணமூர்த்தி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், உளவியல் மய்யத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

வலுவான சமுதாயத்தை உருவாக்கும் நோக்கத்தோடு உருவாக்கபட்ட உளவியல் மய்யமானது, திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில் சிறப்பாக இயங்கிவரும் நிலையில், அதனது சேவையை விஸ்தரிக்கும் பொருட்டு, அம்பாறை மாவட்டத்திலும் பணியை ஆரம்பித்தது.

இதற்கமைவாக இப்பணியை முன்னெடுக்க புதிய அங்கத்தவர்களும் தெரிவுசெய்யப்பட்டனர்.

போதைவஸ்துப் பாவனை, பாலியல் துஸ்பிரயோகத்தை இல்லாதொழித்தல், தற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வுச் செயற்றிட்டங்களை பாடசாலை, கிராம மட்டத்தில் முன்னெடுத்துச் செல்லும் நோக்கோடு, உளவியல் மய்யம் உருவாக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X