2025 மே 02, வெள்ளிக்கிழமை

உள்ளக விளையாட்டரங்கு ஏற்பாடுகள் பூர்த்தி

Princiya Dixci   / 2021 மார்ச் 23 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா

விளையாட்டுத்துறை அமைச்சின் 170 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டில், கல்முனை - சந்தாங்கேணி ஐக்கிய விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்படவிருக்கின்ற உள்ளக விளையாட்டரங்கின் நிர்மாணப் பணிகளை, அடுத்த சில தினங்களில் ஆரம்பிப்பதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்காக விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் மத்திய பொறியியல் நிபுணத்துவப் பணியகத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் பொறியியலாளர்கள் அடங்கிய குழுவினர், கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் சகிதம், இம்மைதானத்துக்கு நேற்று (22) மாலை விஜயம் மேற்கொண்டு, இப்பூர்வாங்க ஏற்பாடுகளைக் கவனித்தனர்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சராக பதவி வகித்த எச்.எம்.எம்.ஹரீஸ், கல்முனை சந்தாங்கேணி ஐக்கிய விளையாட்டு மைதானத்தை அபிவிருத்தி செய்யும் பொருட்டு, இவ்வேலைத்திட்டத்துக்கான நிதியொதுக்கீட்டுக்கு ஏற்பாடு செய்திருந்ததுடன், அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவினால் அடிக்கல் நடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .