2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

உழவு இயந்திரங்கள் 9 கைப்பற்று; சாரதிகளும் கைது

Princiya Dixci   / 2020 நவம்பர் 25 , பி.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார்

அம்பாறை - அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோணிக்கல் பிரதேசத்தை இன்று (25) அதிகாலை சுற்றிவளைத்த திருக்கோவில் விசேட அதிரடிப்படையினர், தோணிக்கல் பாலத்தின் கீழாக சட்டவிரோதமான முறையில் ஆற்று மணல் அகழ்வில் ஈடுபட்ட 9 உழவு இயந்திரங்களை கைப்பற்றியதுடன், உழவு இயந்திரங்களின் சாரதிகளையும் கைது செய்தனர்.

இந்த சுற்றிவளைப்பை, திருக்கோவில் விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.டபிள்யூ.வி.எஸ்.ராஜபக்ஷ தலைமையிலான விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டிருந்தனர். 

குறித்த பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு நடைபெறுவதாகவும் இதனால் அங்கு அமைக்கப்பட்டிருக்கும் பாலத்துக்கு சேதம் ஏற்படுவதாகவும் தமக்கு பொதுமக்களால் தகவல் வழங்கப்பட்டு வந்த நிலையிலேயே, சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட 9 சாரதிகளும் உழவு இயந்திரங்கள் சகிதம் நீதிமன்ற நடவடிக்கைளுக்காக அக்கரைப்பற்று பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .