2025 மே 21, புதன்கிழமை

ஊடகவியலாளர்கள் வழிகாட்டியாக செயற்பட வேண்டும்

Niroshini   / 2016 மார்ச் 23 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

ஊடகவியலாளர்கள் நாட்டின் இறமையை பாதுகாப்பதோடு அபிவிருத்திக்கும் மற்றும் சமூகத்தின் வழிகாட்டியாக செயற்பட வேண்டுமென அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் தலைவர் கலாபூசணம் எம்.ஏ. பகுர்தீன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் மாதாந்தக் கூட்டம் இன்று (22) செவ்வாய்க்கிழமை பொத்துவில் அறுகம்பையில் நடைபெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

சமூகத்தின் முதலிடம் வகிக்கின்ற ஊடகவியலாளர்களிடத்தில் எப்போதும் ஒழுக்கம் காணப்பட வேண்டும்.

ஊடகவியலாளர்களுக்கு தற்போதைய அரசாங்கம் பல சலுகைகளை வழங்கி அவர்களை சுதந்திரமாக செயற்படுவதற்கு வழிவகைகளை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டுக்கும் மக்களுக்கும் எப்போதும் உண்மையான பணியை வழங்குவது தான் ஒரு சிறந்த ஊடகவியலாளருக்குரிய பண்பாகும். ஊடகவியலாளர்கள் எந்த சந்தர்ப்பத்திலும் ஒழுக்கம் தவறக் கூடாது.

எவரிடத்திலும் எந்த பயனையும் எதிர்பாக்காமல் ஊடகவியலாளர்கள் நடுநிலை தவறாது தமது பணியை செய்தல் வேண்டும். அப்போது தான் எமது பணியை சிறந்த முறையில் கொண்டு செல்ல முடியுமென்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .