2025 மே 05, திங்கட்கிழமை

ஊடகவியலாளர் சலீம் கௌரவிப்பு

அஸ்லம் எஸ்.மௌலானா   / 2019 பெப்ரவரி 27 , பி.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை பத்திரிகையாளர் சங்கம், இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் ஆகியனவற்றின் 2017ஆம் ஆண்டுக்கான “வாழ்நாள் சாதனையாளர் ஊடக விருது பெற்ற மூத்த ஊடகவியலாளர் கலாபூசணம் ஏ.எல்.எம்.சலீம், கல்முனை மாநகர சபையினால் “ஊடக முதுசொம்” எனும் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில், மாநகர முதல்வர் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வின்போது குறித்த பட்டம் பொறிக்கப்பட்ட விருது, அவருக்கு வழங்கப்பட்டது.

2018-08-20ஆம் திகதி இடம்பெற்ற கல்முனை மாநகர சபையின் மாதாந்த பொதுச் சபை அமர்வில் ஊடகவியலாளர் ஏ.எல்.எம்.சலீமை பாராட்டிக் கௌரவிக்கும் பிரேரணையொன்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எஸ்.குபேரனால் சமர்ப்பிக்கப்பட்டு, ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருந்தது.

அதன்போது அவருக்கு “ஊடக முதுசொம்” பட்டம் வழங்கும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X