Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 26 , பி.ப. 03:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.கே.றஹ்மத்துல்லா, எஸ்.அஷ்ரப்கான்
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் இரண்டாம் மொழியை விருத்தி செய்யுமுகமாக சிங்கள மொழிக் கற்கை நெறி ஆரம்பிக்கப்படவுள்ளதாக, சிலோன் மீடியா போரத்தின் தலைவர் றியாத் ஏ. மஜீத் தெரிவித்தார்.
தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய அமைச்சர் மனோ கணேசனின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் கே.ஆர்.எம்.றிஸ்கான், சிலோன் மீடியா போரத்தின் தலைவர் றியாத் ஏ.மஜீதிக்குமிடையில் சந்திப்பு, சாய்ந்தமருதில் நேற்று (25) நடைபெற்றது.
இச்சந்திப்பில் சிலோன் மீடியா போரத்தின் தலைவர், அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு சிங்கள மொழிக் கற்கை நெறியை ஆரம்பிப்பதற்கான அமைச்சர் மனோ கணேசனுக்கான கோரிக்கை கடிதத்தை அமைச்சரின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரிடம் வழங்கினார்.
இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட இணைப்பாளர் றிஸ்கான், அமைச்சர் மனோ கணேசனின் வழிகாட்டலில் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் நலன்கருதி, சிங்கள மொழிக் கற்கைநெறியை, செப்டெம்பர் மாதமளவில ஆரம்பிப்பதற்கான நடவடிக்கையை எடுப்பதாகக் கூறினார்.
இக்கற்கை நெறி 100 மணித்தியாலயங்கள் கொண்ட 12 நாள்கள் தொடர்ச்சியாக நடைபெறும். இதில் பங்குகொள்ளும் அரச தொழில் செய்யும் ஊடகவியலாளர்களுக்கு, அரச கரும மொழிகள் திணைக்களத்தினூடாக கடமை விடுமுறை பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இக்கற்கை நெறியில் ஆர்வமுள்ள ஊடகவியலாளர்களின் பெயர் விபரங்களை உடன் மாவட்டத்திலுள்ள ஊடகச் சங்கங்கள் ஒப்படைக்கும் பட்சத்தில் இதற்கான அனுமதியினை அமைச்சரிடம் விரைவாக பெற்று இக்கற்கை நெறியினை ஆரம்பிக்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.
சிங்கள மொழி கற்கை நெறியினை முறையாக பூர்த்தி செய்யும் ஊடகவியலாளர்களுக்கு அரச கரும மொழிகள் திணைக்களத்தின் சான்றிதழ் வழங்கப்படும். இச்சான்றிதழ் வழங்கும் இறுதிநாள் நிகழ்வுக்கு அமைச்சர் மனோ கணேஷன் கலந்து கொள்வார் எனவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
7 hours ago