எம்.எஸ்.எம். ஹனீபா / 2020 ஜனவரி 26 , பி.ப. 02:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஊடகவியலாளர்களைப் பாதுகாத்து அவர்களுக்கான வசதி வாய்ப்புகளை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென, திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரன் கோடீஸ்வரன் கேட்டுக்கொண்டார்.
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் ஒன்றுகூடல், ஆலையடிவேம்பு விபுலானந்த இல்லக் கேட்போர் கூடத்தில் நேற்று (25) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், நாட்டில் ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்படுவதோடு, ஊடகவியலாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான வேலைத் திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டுமென்றார்.
ஊடகவியலாளர்களை பாதுகாக்கின்ற கடமைப்பாடு, அரசாங்கத்திடம் உள்ளதாகக் கூறிய அவர், அழுத்தங்கள், குறைந்த வருமானங்கள் காரணமாக, சிறந்த ஊடகவியலாளர்கள் விலகிச் சென்றுள்ளார்கள் எனவும் சில ஊடகங்கள் ஒரு சில இனத்தை மட்டும் பிரதிநிதித்துவப்படுத்தி செயற்படுகின்றன எனவும் தெரிவித்தார்.
பெரும்பான்மையாக வாழ்கின்ற சிங்கள மக்களுக்கும், தமிழ், முஸ்லிம் மக்களுக்குமிடையில் பாரிய விரிசல்கள் காணப்படுகின்றன. இதனை இல்லாமல் செய்வதற்கு ஊடகங்களும் அரசியல்வாதிகளும் முன்வர வேண்டுமெனவும் அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago