2025 மே 14, புதன்கிழமை

‘ஊரடங்கு காலத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு’

Editorial   / 2020 மே 15 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

கொரோனா வைரஸ் அனர்த்தத்தின் பின்னர்,  அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்  கல்முனை பிராந்திய இணைப்பாளர்  இஸ்ஸதீன் லத்தீப் தெரிவித்தார்.

ஊரடங்குச் சட்ட காலங்களில் மனித உரிமை தொடர்பிலான அறிக்கை குறித்த ஊடகவியலாளர்களுக்கு வழங்கிய தகவலிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

 மேலும் அவர் தெரிவித்ததாவது, “அட்டாளைச்சேனை பிரதேசத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக மகளிர் அமைப்புகள், மனித உரிமை ஆணையத்துக்கு முறைப்பாடு வழங்கியுள்ளனர்.

“அதேபோன்று, பொத்துவில், அட்டாளைச்சேனை, சாய்ந்தமருது பிரதேசங்களில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் குறித்த முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. அம்பாறை மாவட்டத்தில் குறிப்பாக, பால்நிலை அடிப்படையிலான வன்முறைகள் அதிகரித்துக் காணப்படுகிறன.

மேலும், இந்த ஊரடங்குக் காலத்தில், சமூகவிரோத செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. சட்டவிரோத மதுபான உற்பத்தி குறித்து, அக்கரைப்பற்று, திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவிலும் இருந்து அதிகமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளன” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X