2025 மே 13, செவ்வாய்க்கிழமை

ஊரடங்குச்சட்டத்தை மீறிய 79 பேர் கைது

Editorial   / 2020 ஏப்ரல் 07 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில், கடந்த இரண்டு வாரங்களில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில், 79 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்கள் பயணித்த 60 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று,  சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ். ஜயலத், இன்று செவ்வாய்க்கிழமை (07) தெரிவித்தார்.

சம்மாந்துறை, மாவடிப்பள்ளி, நிந்தவூர், காரைதீவு, மாளிகைக்காடு ஆகிய பகுதிகளில், கடந்த மார்ச் மாதம் 22ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 06ஆம் திகதி வரை இவர்கள் கைது செய்யப்பட்டதாக, தெரிவித்தார்.

ஊரடங்கு காலப்பகுதியில் காரணங்கள் எதுவுமின்றி வீதிகளில் நடமாடினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே, இவர்கள் கைது செய்யப்பட்டதாக, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ். ஜயலத் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X