Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம்.எஸ்.எம். ஹனீபா / 2019 டிசெம்பர் 18 , பி.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
“எந்தவோர் இனமும் அதன் தனித்துவ அடையாளங்களை இழந்து விடவே கூடாது” எனத் தெரிவித்த ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் ஹசன் அலி, “ஓர் இனத்தின் தனித்துவ அடையாளம் என்பது இன்னோர் இனத்துக்கு எதிரானது அல்ல” என்றார்.
இது தொடர்பாக, இன்று (18) அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில், “முஸ்லிம்களின் தனித்துவ அடையாள அரசியல் தேவை அற்றது எனக் கருத்துகள் வெளியிடப்பட்டு வருகின்றன. குறிப்பாக, நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிற்பாடு இவ்வாறான கருத்தாடல்கள் வெளியான வண்ணம் உள்ளன” எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த அரசியல் செயற்பாட்டாளர்கள், புத்திஜீவிகள் போன்றவர்களிடம் இருந்தே இவ்வாறான கருத்துகள் வெளியாவதை அவதானிக்க முடிவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், “முஸ்லிம்களுக்கான தனித்துவ அடையாள அரசியலை எம்.எச்.எம். அஷ்ரப் உருவாக்கி கொடுத்துள்ளார். அதற்காகவே, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை உருவாக்கி, தலைமை தாங்கி, வழி நடத்தினார்” என்றார்.
“முஸ்லிம்களுக்கான தனித்துவ அடையாள அரசியல் மூலம், முஸ்லிம் சமூகத்துக்கு, அஷ்ரப் சாதித்துத் தந்தவைகள் ஏராளம்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
“ஆனால், இன்றைய சுயநல முஸ்லிம் தலைமைகள் முஸ்லிம் மக்களுக்கான அரசியலைச் செய்ய அறவே மறந்து விட்டன. இவர்கள்தான் முஸ்லிம்களின் அடையாள அரசியல் களத்தில் இருந்து நீக்கப்பட வேண்டும்” எனவும் அவ் அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .