Editorial / 2020 ஜூன் 30 , பி.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்லம் எஸ்.மௌலானா
கல்முனை மாநகர சபையின் வடக்கு எல்லைக்குள், களுவாஞ்சிக்குடி பிரதேச சபை முன்னெடுத்து வருகின்ற அத்துமீறல் செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்கு அவசர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென, கல்முனை மாநகர சபையின் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் எஸ்.குபேரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கல்முனை மாநகர சபையின் மாதாந்த சபை அமர்வு, நேற்று (29) பிற்பகல், மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் நடைபெற்றது. இதன்போது, கல்முனையின் வடக்கு எல்லை சர்ச்சை தொடர்பில் பிரஸ்தாபித்து உரையாற்றுகையிலேயே, அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில், "களுவாஞ்சிக்குடி பிரதேச சபையும் செயலகமும் எமது மாநகர சபை எல்லைக்குள் அடிக்கடி அத்துமீறும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன. இவற்றைத் தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது.
“இதனால் அப்பகுதிகளில் மக்களிடையே முறுகல் நிலை ஏற்படுகிறது. ஆகையால், இந்த எல்லைப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக முன்னெடுத்துள்ள நடவடிக்கைளை எமது மாநகர மேயர் விரைவுபடுத்த வேண்டும்" என்றும் குபேரன் வலியுறுத்தினார்.
22 Jan 2026
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Jan 2026
22 Jan 2026