Editorial / 2019 ஒக்டோபர் 30 , பி.ப. 05:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பாறுக் ஷிஹான்
ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 13 பேரையும் மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்றம் இன்று (30) உத்தரவிட்டது.
கல்முனை நீதிமன்ற நீதிபதி ஐ.என்.றிஸ்வான் இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.
இதன்போது காத்தான்குடி, கல்முனை, சாய்ந்தமருது மற்றும் சம்மாந்துறை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சந்தேக நபர்கள் 7 பேராகவும் 6 பேராகவும் இருவேறு சந்தர்பங்களில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் பாதுகாப்பு தரப்பினரால் அவசரகால சட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
வழக்கு விசாரணை எதிர்வரும் நவம்பர் மாதம் 13 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
4 hours ago