Mithuna / 2023 டிசெம்பர் 27 , பி.ப. 03:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.ஹனீபா
பொத்துவில் நகரில் அரச மருந்தாக்க கூட்டுத்தாபனத்தின் (அரச ஒசுசல) கிளை திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஸாரப் புதன்கிழமை (27) தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “இப்பிரதேசங்களில் வாழும் மக்கள் அவர்களுக்கு தேவையான மருந்து வகைகளை பெருமளவில் தனியார் மருந்து விற்பனை நிலையங்களிலேயே கொள்வனவு செய்து வருகின்றனர்.
அரச ஒசுசல கிளை ஒன்று இல்லாமையினால் தமக்குத் தேவையான மருந்துகளை பெற்றுக் கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முகங் கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதோடு, அவசரத் தேவைகளுக்கு மருந்துகளை பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நோயாளிகள் அரச ஒசுசலவில் மருந்தைக் கொள்வனவு செய்வதற்கு சுமார் 40 கிலோமீற்றருக்கு அப்பால் உள்ள அக்கரைப்பற்று, நிந்தவூர் ஆகிய பிரதேசங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நோயாளர்கள் பல அசௌகரீயங்களை எதிர்கொள்வதோடு பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பொத்துவில் நகரில் அரச மருந்தாக்க கூட்டுத்தாபனத்தின் (அரச ஒசுசல) கிளை திறக்கப்படும் பட்சத்தில் லகுகல, பாணம, கோமாரி ஆகிய பிரதேசங்களில் சுமார் 70 ஆயிரத்திற்கு மேற்பட்ட நன்மையடையவுள்ளனர்” என தெரிவித்துள்ளார்.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago