2025 மே 05, திங்கட்கிழமை

ஒசுசல கிளையை திறக்குமாறு கோரிக்கை

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2019 பெப்ரவரி 28 , பி.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அம்பாறை - பொத்துவில் நகரில் அரச மருந்தாக்கக் கூட்டுத்தாபனத்தின் (ஒசுசல) கிளையொன்றைத் திறக்குமாறு, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக சுகாதார, சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்னவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“பொத்துவில், லாகுகல, பானம, கோமாரி ஆகிய பிரதேசங்களில், மூவினத்தைச் சேர்ந்த சுமார் 70,000 மக்கள் வாழ்கின்றனர். அவர்களுக்குத் தேவையான மருந்துப் பொருள்களை, தனியார் மருந்து விற்பனை நிலையங்களிலேயே பெருமளவில் கொள்வனவு செய்கின்றனர்.

“இதனால் நடுத்தர, ஏழை வர்க்கத்தினர், பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். அரச ஒசுசலவொன்றில் மருந்தைக் கொள்வனவு செய்ய வேண்டுமாயின், சுமார் 40 கிலோமீற்றருக்கு அப்பாலுள்ள அக்கரைப்பற்று, நிந்தவூர் ஆகிய பிரதேசங்களுக்குச் செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

“ஆகவே, மக்கள் நலன்கருதி “அரச ஒசுசல” ஒன்றை நிறுவ வேண்டும்” என, அம்மகஜரில் கேட்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X