Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
ரீ.கே.றஹ்மத்துல்லா / 2020 மார்ச் 08 , பி.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடக்கு, கிழக்கு மாகாணங்களில், முஸ்லிம் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து பொதுத் தேர்தலில் போட்டியிடுவதன் ஊடாக, பேரினவாதிகளால் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவங்களைக் குறைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் சதிகளை முறியடித்து, முஸ்லிம்களின் நாடாளுமன்றப் பிரதிநிதிதுவங்களை அதிகரிக்கலாமென, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.
பொதுத் தேர்தல் தொடர்பாக, பாலமுனையின் நேற்று (07) இரவு நடைபெற்ற விசேட கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே, அவா் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், இனவாத சிந்தனையுள்ள சிலர், அம்பாறை மாவட்ட நாடாளுமன்றப் பிரதிநிதிகளைக் குறைப்பதற்காக முகவர்களை நியமித்து, தம்மை பலவீனப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர் எனக் குற்றஞ்சாட்டினார்.
இந்த விடயங்களில் அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் விழிப்பாக இருந்து செயல்பட வேண்டுமெனக் கேட்டுக்கொண்ட அவர், அம்பாறை மாவட்டத்தில் மு.கா மத்திய குழுக்களைச் சந்தித்து கருத்துகளைக் கேட்டு, அறிக்கை செய்வதற்காக, கட்சியின் தலைவரால் விசேட குழு நியமிக்கப்பட்டு, அது தொடர்பான அறிக்கைகள், தலைவரிடம் ஏற்கெனவே கையளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
31 minute ago
42 minute ago
48 minute ago