2025 மே 01, வியாழக்கிழமை

ஒரு இலட்சம் வேலை வாய்ப்புக்கான 3ஆம் கட்ட நேர்முகத் தேர்வு

Princiya Dixci   / 2021 மார்ச் 16 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

றாசிக் நபாயிஸ், சர்ஜுன் லாபீர்

ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்களை வழங்கும் திட்டத்தின் கீழ், கல்முனை பிரதேச செயலக பிரிவில், மூன்றாம் கட்டமாக தெரிவுசெய்யப்பட்ட 51 விண்ணப்பதாரிகளுக்கான நேர்முகத் தேர்வு,  பல்நோக்கு அபிவிருத்தி செயலணித் திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எம். அபுல் ஹசனின் ஒருங்கிணைப்பில், பிரதேச செயலாளர் ஜே.லியக்கத் அலி தலைமையில், பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று (16) நடைபெற்றது.

இந்த நேர்முக தேர்வில், பிரதேச செயலக கணக்காளர் யூ.எல்.ஜவாஹிர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர், நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம்.றம்சான், அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர் கே.எல்.யாஸீன் பாவா, நிர்வாக கிராம சேவை உத்தியோகத்தர் யூ.எல் பதுறுத்தீன் ஆகியோர் கலந்துகொண்டு, நேர்முகத் தேர்வுகளை மேற்கொண்டனர்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மிகக் குறைந்த கல்வித் தகைமையுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு அரச தொழிலைப் பெற்றுக்கொடுத்து, அக்குடும்பங்களை வறுமையிலிருந்து விடுவிக்கும் நோக்குடன், ஜனாதிபதியின் சிந்தனைக்கு அமைவாகவே, இந்த நேர்முகத் தேர்வுகள் நடைபெறுகின்றன.

இதில் தெரிவுசெய்யப்படுகின்றவர்களுக்கு பல்நோக்கு அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ், பல்நோக்கு அபிவிருத்திப் பணி உதவியாளர்களாக நியமனம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .