2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

’ஒரு இலட்சம் வேலைவாய்ப்பில் அநீதி’

Princiya Dixci   / 2021 மார்ச் 03 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகா 

ஒரு இலட்சம் பேருக்கான ஜனாதிபதியின் வேலைவாய்ப்பில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக பிரதமரின் மட்டு., அம்பாறை மாவட்ட இணைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரனிடம் (கருணா அம்மான்) மனுவொன்று கையளிக்கப்பட்டுள்ளது. 

ஏனைய சமுகங்களுக்கு நூற்றுக்கணக்கில் அவ்வாய்ப்பு வழங்கப்பட்ட அதேவேளை, தமிழ் மக்களில் ஒரு சிலருக்கே அதுவும் பணம் பெற்றுக்கொள்ளப்பட்டு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அம்மனுவில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 

எனவே, அரசாங்கத்தின் முகவராகவுள்ள தாங்கள் இதுவிடயத்தில் நீதி வழங்கவேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்து சமயகலாசார அலுவல்கள் திணைக்களத்தின் வேண்டுகோளின் பேரில்,  நாட்டிலுள்ள 100 கோவில்களுக்கு பிரதமரின் நிதியுதவி வழங்கிவருகின்ற வேலைத்திட்டத்தின் கீழ், அம்பாறை மாவட்டத்தில் 06 கோவில்களுக்கு காசோலை வழங்குகின்ற நிகழ்வு நடைபெற்ற போது, அங்கு சமுகமளித்திருந்த மக்கள் பிரதிநிதிகள், இக்கோரிக்கையை விடுத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .