2025 மே 12, திங்கட்கிழமை

ஒரு வாக்கு வித்தியாசத்தில் பொத்துவில் பாதீடு நிறைவேற்றம்

ரீ.கே.றஹ்மத்துல்லா   / 2019 டிசெம்பர் 03 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பொத்துவில் பிரதேச சபையின் 2020ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம், சபையின் தவிசாளர் எம்.எஸ்.எம். வாஸீத்தால் இன்று (03) சமர்ப்பிக்கப்பட்டு, ஒரு வாக்கு வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது.

மொத்த உறுப்பினர்கள் 21 பேரில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் இப்பாதீட்டுக்குச் சமூகமளித்திருக்காத நிலையில் வரவு -செலவுத்திட்டத்துக்கான அங்கிகாரம் தவிசாளரால் கோரப்பட்டது.

இதன்போது, ஆளும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த ஐவர் உட்பட ஏனைய கட்சிகளைப் பிரதிநிதித்துவப் படுத்தும் ஐவருமாக 10 பேர் இதற்கு எதிராக வாக்களித்தனர்.

இப்பாதீட்டுக்கு ஆதரவு தவிசாளரால் கோரிக்கை விடுக்கப்பட்ட போது 10 உறுப்பினர் கைகளை உயர்த்தி ஆதரவு தெரிவித்தனர். ஆதரவு வழங்கிய 10 பேருடன் தவிசாளரின் ஆதரவு வழங்கப்பட்டதால் ஒரு வாக்கு வித்தியாசத்தில் 2020ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டது.

குறித்த வரவு - செலவுத்திட்டத்தில் பொது நிர்வாகம், சுகாதார சேவை, பௌதீக திட்டமிடல், பொது பயன்பாட்டுச் சேவை, நலன்புரி சேவை ஆகியனவற்றுக்கு அதிகமான நிதியொதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X