2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

ஒலுவில் கடற்கரையோரத்தை பாதுகாக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 10 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

ஒலுவில் பிரதேசம் கடல் அரிப்பினால் பாரிய பாதிப்புக்குள்ளாகி வருகின்றமையை அரசாங்கத்துக்கும் அரசியல்வாதிகளினதும் கவனத்துக்கு கொண்டுவரும் நோக்கில் ஒலுவிலில் இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெறவுள்ளது.

ஒலுவிலுள்ள பள்ளிவாசல்களின் நிர்வாக சபைகள், சமூக சேவை அமைப்புக்கள், பொது நிறுவனங்கள், கிராம அபிவிருத்திச் சங்கங்கள், விளையாட்டுக்கழகங்கள் மற்றும் இளைஞர் அமைப்புகள் ஆகியவற்றின ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

ஜும்மா தொழுகையின் பின்னர் பிற்பகல் 1.15 மணியளவில் ஒலுவில் ஜும்மா பெரிய பள்ளிவாசலிலிருந்து ஆரம்பமாகி கடல் அரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிவரை ஆர்ப்பாட்டப் பேரணி செல்லவுள்ளதாக இதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

ஒலுவில் துறைமுக நிர்மாணிப்புக் காரணமாக பெரும் சேதங்களுக்குள்ளாகி அழிவடைந்துவரும் ஒலுவில் கிராமத்தினதும் அங்குள்ள மக்களினதும் அவலங்களையும் அழிவுகளையும் வெளியுலகுக்கு எடுத்துக்காட்டும் வகையில் இந்த ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது.  

ஒலுவில் கடற்கரைப் பிரதேசத்தைப் பாதுகாப்பது உட்பட சொத்துக்கள் மற்றும் வளங்களின் அழிவை நிரந்தரமாகத் தடுக்கும் வகையில் சம்மந்தப்பட்டவர்கள் காத்திரமான நடவடிக்கைகளை எடுத்தல், எதிர்காலத்தில் கடல் அரிப்பு ஏற்படாமலிருப்பதற்கான ஏற்பாடுகளை துரிதமாக மேற்கொள்ளுதல், பாதிக்கப்பட்டுள்ள மக்களின் சொத்து இழப்புக்கு நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுத்தல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நிவாரணம் வழங்க சம்மந்தப்பட்ட அமைச்சு மற்றும் திணைக்களங்களை உரிய நடவடிக்கை எடுக்குமாறு இதன்போது வலியுறுத்தப்படவுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X