2025 மே 19, திங்கட்கிழமை

ஒலுவிலில் ஆர்ப்பாட்டம்

Princiya Dixci   / 2016 ஜூலை 29 , மு.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-றியாஸ் ஆதம்   

ஒலுவில் கடற்கரைப் பிரதேசத்தில் நீண்டகாலமாக இடம்பெற்று வரும் கடலரிப்பைத் தடுக்கக் கோரி இன்று வெள்ளிக்கிழமை, அப்பிரதேச மக்களால் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணிக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வருடங்களாக கடலரிப்புக்கு உள்ளாகி வரும் இப்பிரதேத்தின் கரையோரத்தினை அண்டியிருந்த கட்டடங்கள் மரம், செடி, கொடிகள் போன்றன கடலுக்குள் காவு கொள்ளப்பட்டுச் சென்றுள்ளன. இனிவரும் காலங்களில் ஒலுவில் பிரதேசமே கடலுக்குள் சென்று அழிந்துவிடும் அபாயத்தை எதிர்நோக்கியிருப்பதாக அப்பிரதேச பொதுமக்கள், ஒலுவில் அனைத்துப் பள்ளிவாசல்கள் நிருவாகம், ஒலுவில் அபிவிருத்தி ஆலோசனைக் குழு, பொதுநல அமைப்புகள், விளையாட்டுக் கழகங்கள் போன்றன இவ் ஆர்ப்பாட்டத்துக்கான அழைப்பை விடுத்துள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X