2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

ஒலுவிலில் செயலமர்வு

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2019 ஒக்டோபர் 02 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்கிழக்குப் பல்கலைக்கழகத் தொழில்நுட்பவியல் பீடத்தின் உயிர் முறைமையியல் தொழில்நுட்பவியல் பிரிவின் ஏற்பாட்டில், அம்பாறை மாவட்ட உள்ளூர் உணவு உற்பத்தியாளர்களுக்கான் “நற் சுகாதார முறையிலான உணவு உற்பத்தி” செயற்பாடுகள் எனும் தொனிப்பொருளிலான ஒரு நாள் செயலமர்வு, ஒலுவில் வளாகத்தில், நாளை மறுதஜனம் (04) நடைபெறவுள்ளது.

தொழில்நுட்பவியல் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி எம்.ஜி. மொஹம்மட் தாரீக் தலைமையில் நடைபெறவுள்ள இச்செயலமர்வில், உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜிம் கலந்துகொள்ளவுள்ளார்.

முற்றிலும் இலவசமாக நடத்தப்படவுள்ள இச்செயலமர்வில், ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, திருக்கோவில், தம்பிலுவில் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த உணவு உற்பத்தியாளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

மேலதிக விவரங்களுக்கு, 077-3121350 எனும் அலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு கெட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .