2025 மே 05, திங்கட்கிழமை

ஒலுவில் துறைமுகத்துக்கு பிரதியமைச்சர் விஜயம்

Editorial   / 2019 ஜனவரி 21 , பி.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.ஏ.றமீஸ்

ஒலுவில் துறைமுகத்தின் மூலம் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை, எந்தவொரு சமூகத்தினருக்கும் பாதிப்பில்லாத வகையில் உடனடியாகத் தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார்.

ஒலுவில் துறைமுகத்துக்கு நேற்று (20) மாலை விஜயமொன்றை மேற்கொண்டு, மீனவர்கள் மத்தியில் உரையாற்றும்போதே, பிரதியமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து, மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் அம்பாறை மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளைக் கண்டறியும் வகையில் பிரதியமைச்சரின் இவ்விஜயம் அமைந்திருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X