2025 மே 14, புதன்கிழமை

ஒலுவில் முகாமிலிருந்த 05 கடற்படையினருக்கு தொற்று

Editorial   / 2020 மே 18 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, ஒலுவில் துறைமுகத்தில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் முகாமிலிருந்த 05 கடற்படையினருக்கு, கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ. சுகுணன், இன்று (18) தெரிவித்தார்.

ஜாஎல பிரதேசத்திலிருந்து அழைத்துவரப்பட்ட 80 கடற்படையினர், ஒலுவில் தனிமைப்படுத்தல் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

இவர்களில் 05 கடற்படையினருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மூவர் வெலிகந்தைக்கும், இருவர் கொழும்புக்கும் மாற்றப்பட்டுள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும், 05 கடற்படையினர் கொரோனாத் தொற்று பரிசோதனைக்காக மட்டக்களப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனரெனவும், தெரிவித்தார்.

அதேவேளை, தனிமைப்படுத்தல் முகாமில் வைக்கப்பட்டுள்ள மிகுதி 70 கடற்படை வீரர்களுக்கும், நாளை (19) பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .