Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
வி.சுகிர்தகுமார் / 2019 மார்ச் 21 , பி.ப. 03:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒவ்வொரு கோவில்களும் கல்விச்சாலைகளாகச் செயற்படவேண்டுமெனவும் அப்போதுதான், கல்வியில் சமூகம் உயர்ந்து விளங்குமெனவும், திருக்கோவில் கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் வை.ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.
அம்பாறை - பனங்காடு அருள்மிகு மாதுமை உடனுறை ஸ்ரீ பாசுபதேசுவரர் திருத்தலத்தின் தீர்த்தோற்வசத்தை முன்னிட்டு, செட்டிக்குடி மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கல்வியில் சாதனை படைத்த மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வில், பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், இன்று எமது சமூகத்துக்கு மிகவும் அவசியமான தேவைப்பாடு கல்வியே எனத் தெரிவித்ததுடன், அந்தக் கல்வியை உயர்த்துவதற்கு எம்மிடம் என்னென்ன வழிகள் உண்டோ, அவை யாவற்றையும் நாம் பின்பற்ற வேண்டுமென்றார்.
மேலும், கோவில்களில் செய்யப்படும் வீணான களியாட்டச் செலவுகளைத் தவிர்த்து, கல்விக்கான பணிகளை முன்னெடுக்குமாறு, அனைத்துக் கோவில் நிர்வாகத்தினரிடமும் பணிவான கோரிக்கையையும் அவர் முன்வைத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .