2025 மே 08, வியாழக்கிழமை

‘ஓட்டோ சாரதிகள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்’

Editorial   / 2019 செப்டெம்பர் 06 , பி.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சபேசன்

மாணவர்களை ஏற்றிச்செல்லும் ஓட்டோ சாரதிகள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டுமென, கல்முனை போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி வீ.நிகால் சிறிவர்த்தன  தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களை ஏற்றி இறக்கும்  ஓட்டோ சாரதிகளுடன் இடம்பெற்ற விழிப்புணர்வு கருத்தரங்கு, இன்று (6) காலை நடைபெற்றது. இதன் போதே. அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்துரைத்த அவர்,  கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட    பாடசாலைகளில் மாணவ,  மாணவவிகளை  ஏற்றிச்செல்லும் ஒவ்வொரு சாரதிகளும் வீதி  சட்ட விதிமுறைகளை  பின்பற்ற வேண்டுமெனவும் கூறினார்.

தற்போது உங்களின்  ஊட்டோக்களில்  ஏற்றிச்செல்படுபவர்கள், நாளைய தலைவர்களை என்பதை மனதில் நிறுத்தி  உங்கள் சேவையை முன்னெடுக்க வேண்டும் என்றார்.

சில சாரதிகள் கூடுதலான மாணவர்களை பணத்துக்காக ஏற்றிச்செல்லும்  நிலைமைகளை  தவிர்க்க முன்வர வேண்டும். பொதுவாக ஓட்டோ சங்கங்கள் இயங்குகின்றன. ஆனால் பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் ஓட்டோ உரிமையாளர்கள் புதிதாக சங்கம் ஒன்றினை உருவாக்கி எமது போக்குவரத்து பொலிஸ் பிரிவுடன் ஒத்துழைக்க வேண்டும்.

மாணவ மாணவிகளின் உயிர்களுடன் முச்சக்கர வண்டி  சாரதிகள் விளையாடாது  உயிர்களின் பெறுமதியினை பற்றி சிந்திக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X