அஸ்லம் எஸ்.மௌலானா / 2019 ஓகஸ்ட் 26 , பி.ப. 03:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசாங்க சேவையில் இருந்து ஓய்வுபெறுவோர், தமது முதல் நியமனத் திகதியில் இருந்து ஓய்வுபெறும் தினம் வரை செலுத்திய ஓய்வூதியப் பங்களிப்பு விவரங்களை, ஓய்வூதியத் திணைக்களத்துக்குச் சமர்ப்பிக்க வேண்டும் எனும் புதிய சுற்றுநிருபம் இரத்துச் செய்யப்பட வேண்டுமென, இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இவ்வேண்டுகோளை வலியுறுத்தி, சங்கத்தின் செயலாளர் ஏ.எல்.எம்.முக்தார், பொது நிர்வாக அமைச்சின் செயலாளருக்கும் ஓய்வூதியத் திணைக்கள பணிப்பாளர் நாயகததுக்கும் இன்று (26) கடிதம் அனுப்பிவைத்துள்ளார்.
அந்தக் கடிதத்தில், குறித்த சுற்றுநிருபத்தால் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த அரச உத்தியோகத்தர்கள் வெகுவாகப் பாதிக்கப்படக்கூடிய நிலை உருவாகியுள்ளதாகவம் இம்மாகாணங்களில் இடம்பெற்ற யுத்தம், சுனாமி காரணமாக பாடசாலைகள், கல்வி அலுவலங்கள் உள்ளிட்ட பெரும்பாலான அரச அலுவலங்களிலிருந்த ஆவணங்கள் சேதமடைந்தும் அழிவடைந்தும் காணாமல் போயுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
2004ஆம் ஆண்டுக்குப் பின்னரே, சம்பளக் கொடுப்பனவுகள் கணினி மயப்படுத்தப்பட்டு, ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதால் அதற்குப் பின்னரான விவரங்களை மட்டுமே பெறக்கூடியதாக இருக்குமென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகையால், ஓய்வூதியத் திணைக்களத்தின் முன்யோசனையற்ற இச்சுற்றுநிருபத்தை உடனடியாக இரத்துச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று, அக்கடிதத்தில் செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago