Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 நவம்பர் 27 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
அம்பாறை மாவட்டத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை மீள வழங்குவதற்கு துரித நடவடிக்கை எடுக்குமாறு நல்லாட்சி அரசாங்கத்தை வலியுறுத்தி காணி உரிமைக்கான அம்பாறை மாவட்ட செயலணியின் ஏற்பாட்டில் மாவட்டத்தின் 05 பிரதேசங்களில் ஞாயிற்றுக்கிழமை கவனயீர்ப்புப் போராட்டங்கள்; முன்னெடுக்கப்பட்டன.
நிந்தவூர், ஒலுவில், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, பொத்துவில் ஆகிய பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்தில் காணிகளை இழந்த பலர் கலந்துகொண்டனர்.
ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தங்களின் காணிகளை துரிதமாக மீட்டுத் தருவதற்கு நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டோர் கோரிக்கை விடுத்தனர்.
இதன்போது காணி உரிமைக்கான அம்பாறை மாவட்டச் செயலணித்; தலைவர் பி.கைறுதீன் தெரிவிக்கையில்,'கடந்த யுத்தத்தைக் காரணங்காட்டி அம்பாறை மாவட்டத்தில் பரம்பரை பரம்பரையாக விவசாயச் செய்கையில் ஈடுபட்டவந்த சிறுபான்மையின விவசாயிகளின் காணிகள் பறிக்கப்பட்டும் திட்டமிட்ட குடியேற்றக்காரர்களுக்கு பகிரப்பட்டும் வந்துள்ளன.
யுத்தம் முடிந்த பின்னர் எங்களின் காணிகளுக்குச் செல்லமுடியும் என்ற கனவையும் கடந்த அரசாங்கம் கலைத்து விட்டது. எங்களின் காணிகளை நல்லாட்சி அரசாங்கம் மீட்டுத்தராமை கவலை அளிக்கின்றது.
ஆக்கிரமிக்கப்பட்டுள்ள எங்களின் காணிகளை மீள வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பலமுறை மகஜர்கள் வழங்கிக் கலந்துரையாடியபோதிலும், அரச நிர்வாகமானது கண்டும் காணாமல் இருக்கின்றமை காணிகளை இழந்த மக்களுக்கு கவலை அளிக்கின்றது' என்றார்.
11 minute ago
32 minute ago
25 Sep 2025
25 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
32 minute ago
25 Sep 2025
25 Sep 2025