2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

காணி சுவீகரிப்பை நிறுத்தக் கோரி கவனயீர்ப்புப் பேரணி

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 30 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஒலுவில் அஷ்ரப் நகர் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் காணி சுவீகரிப்பை தடுத்து நிறுத்துமாறு கோரியும் அபகரிக்கப்பட்டுள்ள காணிகளை மீள வழங்குமாறு கோரியும் இன்று வெள்ளிக்கிழமை (30) கவனயீர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டது.

தொழுகையின் பின்னர் ஒலுவில் அஷ்ரப் நகர் ஜும்மா பள்ளிவாசலிலிருந்து பேரணி ஆரம்பமாகி நிடைபெற்றது. இதன்போது, மகஜரும் அட்டானைச்சேனைப் பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.
 

இது தொடர்பில் அஷ்ரப் நகர் ஜும்மா பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் உறுப்பினர் அகமது லெப்பை மிஸ்பாக் கருத்துத் தெரிவிக்கையில், 'எங்களது மூதாதையர்களால் காடு வெட்டி வாழ்ந்து வந்த காணிகளில் 1980ஆம் ஆண்டு அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினால் காணி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. இக்காணியை அபகரிக்கப்பட்டு தற்போது அங்கு இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் வேறு நபர்களுக்கு வழங்குவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுமார் 63 ஏக்கர் ஹெக்டேயர் காணி அபகரிக்கப்பட்டுள்ளதால் அதில் வசித்து வந்த 59 குடும்பங்கள் கடந்த 05 வருடங்களாக வாழ்வதற்கு இடமில்லாமல் மிகவும் கஷ்டப்படுகின்றோம்.

2000ஆம் ஆண்டு காலப்பகுதியில் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரபின் காலத்தில் இக்காணிகள் அளக்கப்பட்டு எல்லைக் கற்கள் போடப்பட்டிருந்தது.

யானை வேலி நிர்மாணிப்பது என்ற போர்வையில் இக்கற்கள் அகற்றப்பட்டு எங்களது காணிகள் தற்போது வன இலாகா திணைக்களம் பொறுப்பேற்றுள்ளதாக நாம் அறிகின்றோம்.

எனவே, இராணுவ முகாமை அகற்றி எங்களது காணிகளை மீள வழங்க வேண்டும். தவறும் பட்சத்தில் உண்ணாவிரோதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அவர் கூறினார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X