2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

காணிப் பிரச்சினையை தீர்க்க கோரி ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 28 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

அம்பாறை மாவட்டத்தில் கரும்புச் செய்கையில் ஈடுபடும்; காணி உரிமையாளர்களின் பிரச்சினையைத் தீர்க்குமாறு கோரி இரண்டாம் கட்ட ஆர்ப்பாட்டத்துடன் உண்ணாவிரதமும் நாளை மறுதினம்; சனிக்கிழமை ஹிங்குரான நகரத்தில் இடம்பெறவுள்ளதாக ஆலங்குளம் விவசாயிகள் அமைப்பின் செயலாளர் யூ.கே.சம்சுதீன், இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்.

கடந்த மாதம் 10ஆம் திகதி அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்துக்கு முன்பாக குறிப்பிட்ட விடயம் தொடர்பில் ஆர்ப்பாட்டம் நடத்திய பின்னர் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரிடம் இது தொடர்பில் மகஜர் கையளித்திருந்தும் இதுவரை காலமும் இப்பிரச்சினை தீர்க்கப்படாமல்; உள்ளது. இந்நிலையிலேயே, இரண்டாம் கட்ட ஆர்ப்பாட்டத்துடன் உண்ணாவிரதத்தையும்  நடத்துவதற்கு திட்டமிட்டுலுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதில் 'அம்பாறை மாவட்ட ஒன்றிணைந்த விவசாயிகள் பாதுகாப்பு அமைப்பு' எனும் பெயரில் ஆலங்குளம், தீகவாவி, நுரைச்சோலை, நீத்தை, இறக்காமம், கல்முனை, கல்மடுவ போன்ற பிரதேசங்களிலுள்ள மூவாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் இப்போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X