2025 மே 03, சனிக்கிழமை

காணாமல் போன மீனவர்களைத் தேடும் நடவடிக்கையில் திருப்தியில்லை

Princiya Dixci   / 2017 ஜனவரி 04 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா

மீன்பிடிக்காக 2 இயந்திர படகுகளில் கடலுக்குச் சென்று காணாமல் போயுள்ள கல்முனையை சேர்ந்த ஆறு மீனவர்களையும் மீட்பதற்காக மேற்கொள்ளப்படும் தேடுதல் நடவடிக்கையில் தமக்குத் திருப்தியில்லையென அப்பகுதி மீனவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

ஆகையினால் அவர்களை தேடும் பணியை மீனவர்களாகிய தாமே முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர்கள் தீர்மானித்துள்ளனர்.
கடந்த டிசெம்பர் மாதம் 24ஆம் திகதி, ஒலுவில் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற இப்படகுகள் இரண்டும், 12 நாட்கள் கடந்தும் இன்னும் கரை திரும்பவில்லை.

இந்நிலையில், சாய்ந்தமருது கடற்கரையில் கல்முனைப் பிரதேச படகுகளின் உரிமையாளர்கள், மீனவர் சங்கத் பிரதிநிதிகள் உட்பட மீனவர்கள் நேற்று (04) ஒன்றுகூடி நடத்திய கலந்துரையாடலின் போதே, அவர்கள் இதனைக் குறிப்பிட்டனர்.

அங்கு அவர்கள் மேலும் தெரிவிக்கையில்;,

'காணாமல் போயுள்ள ஆறு மீனவர்களையும் தேடுவது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அதற்காகக் கடற்படை, விமானப்படை என்பன செயற்படுவதாகவும் அரசியவாதிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், உண்மையில் தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறதா அல்லது கண்துடைப்புக்காக ஏதும் செய்யப்படுகிறதா என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது' என்று குறிப்பிட்டனர்.

'கடந்த காலங்களிலும் இவ்வாறு இப்பகுதி மீனவர்கள் காணாமல் போன சந்தர்ப்பங்களில் கடற்படையினராலோ விமானப்படையினராலோ எவரும் மீட்கப்பட்ட வரலாறு கிடையாது. அப்போதெல்லாம் மீனவர்கள் தமது படகுகளில் சென்று தேடியே சிலர் மீட்கப்பட்டிருக்கின்றனர்' என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X