2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

காணாமல் போனோர் குடும்பங்களுடன் இணையவேண்டிப் பிரார்த்தனை

Suganthini Ratnam   / 2016 ஜூலை 24 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்,கனகராசா சரவணன் 
 
காணாமல் போனோர் மீண்டும் அவர்களின்   குடும்பங்களுடன் இணைய வேண்டுமெனப்; பிரார்த்தித்து விசேட பூஜை வழிபாடு, திருக்கோவில் கள்ளியந்தீவு சகல கலையம்மன் கோவிலில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, கோவில் முன்றலில் ஒன்றுகூடிய காணாமல் போனோரின் உறவினர்கள், அமைதியான முறையில் கவனயீர்ப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டனர்.

காணாமல் போனோர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட பூஜை வழிபாட்டிலும் கவனயீர்ப்புப் போராட்டத்திலும் காணாமல் போனோரின் உறவினர்கள் பலர்; கலந்துகொண்டனர்.  

இங்கு காணாமல் போனோரின் உறவினர்கள் தெரிவிக்கையில், 'காணாமல் போனோர் தொடர்பில்  ஆராய்வதற்காக ஐக்கிய நாடுகள்  இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென்பதுடன், இதனை நடைமுறைப்படுத்த அரசாங்கம் முழுமனதுடன் செயற்படவேண்டும்.

வடக்கிலும் தெற்கிலும் சிவில் அமைப்புகளும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும்; இது தொடர்பில் பல்வேறு நடவடிக்கைகளை கடந்த காலத்தில் மேற்கொண்டபோதிலும், இது தொடர்பில்  கிழக்கு மாகாணத்தில் போதியளவு செயற்பாடுகள முன்னெடுக்கப்படவில்லை' என்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X