2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

கிணற்று நீரில் நஞ்சு கலந்துள்ளதாக முறைப்பாடு

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 02 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, ஒலுவில் பிரதேசத்தின் 7ஆம் பிரிவிலுள்ள வீட்டு வளவொன்றில் அமைந்துள்ள கிணற்று நீரில்; நஞ்சு கலக்கப்பட்டுள்ளதாக  அவ்வளாக உரிமையாளர் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார்,  இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

அத்துடன் வளவினுள் காணப்பட்ட பூச்செடிகள், பயிர்கள் குழாய்நீர் இணைப்புகள் மற்றும் சைக்கிளும்  என்பனவும்  சேதமாக்கப்பட்டுள்ளன.

குறித்த கிணற்று நீரில் துர்நாற்றம் வீசியதுடன், அந்நீரில் வெண்படலம் மிதந்து காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை (01) இரவு வேளை அவ்வீட்டிலுள்ளோர்; உறங்கிக்கொண்டிருந்தபோது,  வளவுப்; படலையை  உடைத்துக்கொண்டு  உள்நுழைந்தோர் இதனைச் செய்திருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கிணற்று நீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X