வி.சுகிர்தகுமார் / 2019 ஒக்டோபர் 12 , பி.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆலையடிவேம்பு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள க.பொ.த சாதாரணதர மாணவர்களுக்கான இலவச ஐந்து நாள் பயற்சி கருத்தரங்கு, இன்று (12) ஆரம்பமானது.
அக்கரைப்பற்று பனங்காடு பாசுபதேசுவரர் வித்தியாலயம், பெருநாவலர் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் ஆரம்பமான இக்கருத்தரங்கில், திருக்கோவில் கல்வி வலயத்துக்குட்பட்ட ஆலையடிவேம்பு கல்விக்கோட்டத்தின் பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கமைவாக, பனங்காடு பாசுபதேசுவரர் வித்தியாலயத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் பி.சஜீவன் தலைமையில், இணைப்பாளர் க.விவேக் ஒருங்கிணைப்பில், இன்று நடைபெற்ற ஆரம்ப நாள் கருத்தரங்கு நிகழ்வில், பாசுபதேசுவரர் ஆலய உதவிக்குரு சிவஸ்ரீ பார்த்தீபன் சர்மா குருக்கள் கலந்து கொண்டு ஆசி உரை வழங்கினார்.
தொடர்ந்து பாசுபதேசுவரர் வித்தியாலயத்தின் அதிபர் க.ஜெயந்தன் கலந்து கொண்டு கருத்தரங்கின் முக்கியத்துவம் பற்றியும் இதை மாணவர்கள் சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் குறிப்பிட்டிருந்தார்.
இக்கருத்தரங்கில் ஆலையடிவேம்பு கல்விக்கோட்டத்துக்குட்பட்ட அதிகளவான மாணவர்கள் கலந்து கொண்டதுடன், கருத்தரங்கை பல்கலைக்கழகத்தில் சிறப்பு பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்கள் முன்னெடுத்தமை சிறப்பம்சமாகும்.

13 minute ago
15 minute ago
36 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
15 minute ago
36 minute ago
1 hours ago