2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

குருபெயர்ச்சி மகா யாகம்

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 08 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்  

அக்கரைப்பற்று பனங்காடு அருள்மிகு மாதுமை உடனுறை பாசுபதேசுவரர் தேவஸ்தானத்தில் குருபெயர்ச்சி மகா யாகம் எதிர்வரும் 11ஆம் திகதி நடைபெறவுள்ளது.

நவக்கிரகங்களில் சுபக்கிரகமாக விளங்கும் குருபகவான் எனப்படும் வியாழபகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு மாறுகின்றார். இம்மாற்றமானது நிகழும் தினம் திருக்கணித பஞ்சாங்கத்தில் 11ஆம் திகதி எனவும் வாக்கிய பஞ்சாங்கத்தில் 02ஆம் திகதி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் பாசுபதேசுவரர் ஆலய கும்பாபிசேகம் திருக்கணித பஞ்சாங்கத்தின் படி நடைபெற்றதனாலும், குருபகவான் மாற்றம் பெறும் 11ஆம் திகதி குருபகவானுக்குரிய வியாழக்கிழமையில் வருவதானலும் அன்றையதினமே மகாயாகம் இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கோவில் நிர்வாகம் தெரிவித்தது.

குரு பார்த்தால் கோடி நன்மை என்பது ஆன்றோர் வாக்கு. இக்குருபகவானின் மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து நிவாரணம் குரு வழிபாடு சிறந்த பரிகாரமாகும். ஆகவே இதனை கருத்திற்கொண்டு மக்களின் நன்மை கருதி குருபகவானின் திருவருள் வேண்டி நடைபெறும் தோச நிவர்த்தி குருப்பெயர்ச்சி யாகத்தில் பாதிப்புகள் ஏற்படும் என கருதும் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டது. யாகத்துக்குரிய பொருட்கள்  கோவிலில்; வழங்கப்படும் எனவும் அன்றையதினம் விசேட அபிஷேக அர்ச்சனைகள் இடம்பெறுவதுடன் பூஜையில் வைக்கப்பட்டு பூஜிக்கப்படும் மஞ்சள் நிறக்காப்பும் அடியவர்களுக்கு வழங்கப்படும்.

மகாயாகத்தின் கிரியைகள் யாவும் ஆலய பிரதம குரு ஈசான சிவாச்சாரியார் சிவஸ்ரீ. அ.கு.மூர்த்தீஸ்வரக் குருக்கள் தலைமையில் இடம்பெறும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X