2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கிராம உத்தியோகஸ்தர்களுக்கான 420 வெற்றிடங்கள்

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 21 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

நாட்டில் 14 ஆயிரத்து 200 கிராம உத்தியோகஸ்தர்கள் பிரிவுகளில் 420 வெற்றிடங்கள் நிலவுகின்றன. இவ்வெற்றிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளதாக ஸ்ரீ லங்கா ஐக்கிய கிராம உத்தியோகஸ்;தர்கள் சங்கத்தின் தலைவர் டபிள்யூ.என்.எம்.வன்னிநாயக்க தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேச கிராம உத்தியோகஸ்;தர்கள் சங்கத்தின் மாநாடு, இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனை லொயிட்ஸ் மண்டபத்தில் நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், அம்பாறை மாவட்ட கிராம உத்தியோகஸ்தர்களுக்கு மானிய அடிப்படையில் மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படாமல் இருப்பதையிட்டு வழக்குத் தாக்கல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  
அம்பாறை மாவட்ட கிராம உத்தியோகஸ்தர்களுக்கு மானிய அடிப்படையில் மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படாமல் இருப்பது மனித உரிமை மீறும் செயலாகும்.

கிராம உத்தியோகஸ்தர்களுக்கு கடந்த ஆட்சிக் காலங்களில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் கிராம உத்தியோகஸ்தர்களுக்கு இந்த அரசாங்கத்தால் அநீதி இழைக்கப்படுமேயானால் அவர்களுக்கு எதிராகவும் போராடுவோம்' என்றார்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X