2025 மே 19, திங்கட்கிழமை

கார், மோட்டார் சைக்கிள் தீக்கிரை

Suganthini Ratnam   / 2016 ஜூலை 04 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வசந்த சந்திரபால

அம்பாறை, சித்டதிஸ்ஸ பாடசாலைக்கு முன்பாக உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்கு முன்பாக நிறுத்திவைக்கப்பட்ட காரொன்றும் மோட்டார் சைக்கிளொன்றும் இன்று திங்கட்கிழமை அதிகாலை இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

குறித்த வர்த்தக நிலையத்துக்கு முன்பாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரிலிருந்து  ஹார்ன் சத்தம் கேட்டுள்ளது. சத்தம் வந்த திசையை பொதுமக்கள் நோக்கியபோது, காரும் மோட்டார் சைக்கிளும் தீப்பிடித்து எரிவதைக் கண்டனர். இந்நிலையில் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.

கார், மோட்டார் சைக்கிள் என்பன முற்றாகத் தீக்கிரையாகியுள்ளதுடன்,  வர்த்தக நிலையத்தின் முன்;பகுதியும் தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தத் தீ விபத்துத் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X