Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 ஓகஸ்ட் 26 , மு.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-.எம்.எஸ்.எம்.ஹனீபா
அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குடப்பட்ட பாலமுனை, ஹூஸைனியா நகர்; கிராமத்தில் கடந்த 10 வருடங்களாக மூடப்பட்டுக் காணப்படும் கிராமிய கைத்தொழில் பயிற்சி நிலையத்தை மீள ஆரம்பிக்குமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ், இயங்கிய கிராமிய கைத்தொழில் பயிற்சி நிலையத்தில் ஆழ்கடல் மீன்பிடி, வள்ளங்களின் வெளி இயந்திரங்களை திருத்துதல், தச்சுத்தொழில், ஆங்கில தட்டச்சு, வீட்டு மின்னிணைப்பு, நீர்க்குழாய் பொருத்துதல் உள்ளிட்ட பயிற்சிநெறிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இங்கு அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், திராய்க்கேணி, அக்கரைப்பற்று ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த இளைஞர், யுவதிகள் பயின்றுவந்திருந்தனர்.
தற்போது இந்தப் பயிற்சி நிலையம் மூடப்பட்டு, அங்கிருந்த உபகரணங்களும் அகற்றப்பட்டு கவனிப்பாரற்று உள்ளது.
இந்த பயிற்சி நிலையம் மீள ஆரம்பிக்கப்படும் பட்சத்தில் இளைஞர், யுவதிகள் ஆர்வத்துடன் தொழிற்பயிற்சிகளை மேற்கொள்ளமுடியும். மீள ஆரம்பிக்கும்போது இந்தப் பயிற்சி நிலையத்தில் கணினி, தகவல் தொழில்நுட்பம், இலத்திரனியல் ஆகிய கற்கைநெறிகளை ஆரம்பிக்குமாறும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் இலங்கை கைத்தொழில் அதிகாரசபையின் அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஈ.விநோதராஜிடம் நேற்று செவ்வாய்க்கிழமை கேட்டபோது, 'இந்த பயிற்சி நிலையத்தில் பௌதீகவள வசதியின்மை காணப்பட்ட அதேவேளை, பயிற்சி நிலையத்துக்கு குறித்த காலப்பகுதியில் பயிலுநர்கள் குறைவாக காணப்பட்டதினாலும் மூடப்பட்டது.
இந்தப் பயிற்சி நிலையத்தை மீள ஆரம்பிப்பதற்கு இலங்கை கைத்தொழில் அதிகாரசபையினுடைய தலைவரின் அனுமதிக்காக கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும் 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தப் பயிற்சி நிலையம் மீள ஆரம்பிக்கப்படும்' எனவும் அவர் தெரிவித்தார்.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago