2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

கௌரவிப்பு நிகழ்வு

Niroshini   / 2015 ஓகஸ்ட் 30 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

மத்தியமுகாம் 11ஆம் மற்றும் 13ஆம் கிராம பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இம்முறை புதிதாக பல்கலைக்கழகம் நுழையும் கனிஷ்ட  மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை ஒன்றியத்தின் தலைவர் கே.தினேஸ் தலைமையில் சது /றாணமடு இந்து மகா வித்தியாலய தினகரம்பிள்ளை மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.கரன், நாவிதன்வெளி பிரதேச செயலக திவிநெகும தலைமைப்பீட முகாமையாளர் எஸ்.சிறிநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது, புதிதாக பல்கலைக்கழகம் நுழையும் கனிஷ்ட  மாணவர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அங்கத்துவ அட்டையும் வழங்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X