2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

குழுக்களுக்கிடையே மோதல்: இருவர் படுகாயம்; அறுவருக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 25 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்

இருவர் படுகாயமடைந்தமை தொடர்பான தாக்குதல் மற்றும் வாள்வெட்டு சம்பவங்களில் கைதுசெய்யப்பட்ட 6 சந்தேகநபர்ளை, எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் மேலும் பெண்கள் இருவரைத் தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீரப்பிணையில் விடுவித்தும் அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிவானும் மேலதிக நீதவான் நீதிமன்ற நீதிவானுமாகிய திருமதி நளினி கந்தசாமி, புதன்கிழமை (24)  உத்தரவிட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது,

அம்பாறை, அட்டாளைச்சேனை 8ஆம் பிரிவில் இரு சகோதரிகளுக்கிடையில் செவ்வாய்க்கிழமை (23) மாலை ஏற்பட்ட காணிப் பிரச்சினை தொடர்பான சண்டையில் 27 வயதுடைய பெண்ணொருவரது வீட்டினுள் சிலர் புகுந்து தாக்குதல் நடத்தியதையடுத்து அப்பெண் படுகாயமடைந்த நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து மறுநாள் காலை, அப்பெண்ணின் சகோதரர்கள் இருவர், தாக்குதல் நடத்திய நபர்களில் ஒருவரை வீதியில் வைத்து வாளாள் வெட்டியுள்ளனர். இதனால் 38 வயதுடைய அந்நபர் படுகாயமடைந்த நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் இந்தத் தாக்குதல் மற்றும் வாள்வெட்டுச் சம்பவங்கள் தொடர்பாக பெண்கள் நால்வரும் ஆண்கள் இருவரும், புதன்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டனர். மேலும், சம்பவங்களில் காயமடைந்த பெண் மற்றும் நபரையும் பொலிஸார் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X