2025 மே 21, புதன்கிழமை

கிழக்கு பிராந்தியத்தின் முதலீட்டு ஊக்குவிப்பு வலயமாக ஒலுவில் துறைமுகத்தை மாற்ற நடவடிக்கை

Suganthini Ratnam   / 2016 மார்ச் 06 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

ஒலுவில் துறைமுகத்தை கிழக்குப் பிராந்தியத்தின்  முதலீட்டு ஊக்குவிப்பு வலயமாக மாற்றி அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமென ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர அபிவிருத்தி மற்றும்  நீர்வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஒலுவில் கிராமத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல், துறைமுக அதிகார சபையின் ஒலுவில் சுற்றுலா விடுதியில் சனிக்கிழமை (05) நடைபெற்றபோதே அவர் இதனைக் கூறினார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'ஒலுவில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்து,   இப்பிராந்தியத்தில் கைத்தொழில் பேட்டைகளை உருவாக்குவது தொடர்பில் துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அலுவல்கள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவுடன்  கலந்துரையாடியுள்ளேன்.

மேலும், துறைமுக நிர்மாணிப்புக்காக காணிகள் சுவீகரிக்கப்பட்டு இதுவரையில் நட்டஈடு வழங்கப்படாத காணி உரிமையாளர்களுக்கு மிக விரைவில் நட்டஈடு வழங்குவது தொடர்பிலும் உரியவர்களிடம் கலந்துரையாடியுள்ளேன்' என்றார்.  

ஒலுவிலில் கடல் அரிப்பை இல்லாமல்ச் செய்வதற்கான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். அத்துடன், ஒலுவில் கிராமத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள பொலிஸ் நிலையத்தை பொருத்தமான வேறொரு இடத்துக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

அண்மித்த பாடசாலை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், ஒலுவில் அல் ஹம்றா மகா வித்தியாலயத்தை இணைப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கப்படும்' எனவும் அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .