2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

கிழக்கு மாகாணத்துக்கு 192 ஆசிரியர்கள் நியமனம்

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 02 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா

இம்முறை தேசிய கல்வியியல் கல்லூரிகளில் ஆசிரியர் டிப்ளோமா பட்டம் பெற்றவர்களுக்கான ஆசிரியர் நியமனத்தின் மூலம் கிழக்கு மாகாணத்தில் 192 ஆசிரியர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.அப்துல் நிஸாம், இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

தமிழ் மொழி மூல ஆசிரியர்கள் 123 பேரும் சிங்கள மொழி மூல ஆசிரியர்கள் 69 பேரும் அடங்குகின்றனர்.
இவர்களுக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு, நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளது.

இதன் பின்னர், மேற்படி ஆசிரியர்கள், கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர்களுக்கு தட்டுப்பாடு நிலவுகின்ற கஷ்டப் பிரதேச பாடசாலைகளுக்கு நியமிக்கப்படுவார்கள் எனவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X