Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2016 ஒக்டோபர் 09 , மு.ப. 10:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
பைஷல் இஸ்மாயில்
'கிழக்கு மாகாணத்தின் கல்வித்துறையை சீரழிக்கும் வகையில் சில திட்டங்கள் மத்திய கல்வியமைச்சினால் திரைமறைவாக முன்னெடுக்கப்படுகின்றதா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது' என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் செயிலாப்தீன் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார். அவ்வறிக்கையில் மேலும் கூறியுள்ள அவர்,
'கிழக்கு மாகாணத்தில் 5,021 ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுகின்றது. அதனை பெற்றுக்கொள்வதற்கு கடிதம் மூலமாகவும் நேரடியாகவும் கல்வியமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சிக்கு கோரிக்கை விடுத்தப் போதிலும் இதுவரை அது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அத்துடன் எமது நியாயபூர்வமான கோரிக்கைகளை உதாசீனப்படுத்தி, கிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கு வெளி மாகணங்களில் நியமனம் வழங்கப்பட்டுள்ளமைக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் என்ற வகையில் நான் கண்டனம் தெரிவிக்கின்றேன்' என குறிப்பிட்டுள்ளார்.
'இதேவேளை 13 ஆவது திருத்தச் சட்டத்தை அவமதிக்கும் வகையில் பொறுப்பற்ற விதத்தில் கல்வியமைச்சின் செயலாளர் நடந்து கொள்வது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத விடயது என்பதை நான் தெட்டத் தெளிவாக கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.
13 ஆவது திருத்தச் சட்டத்துக்கூடாக, மாகாண பாடசாலைகள் குறித்த அதிகாரம் மாகாண அரசாங்கங்களுக்கு வழங்கப்பட்டப் போதிலும் தமது அதிகாரத்தின் கீழுள்ள பாடசாலைகளுக்கான நியமனங்களை வழங்குவது தொடர்பில் மாகாண முதலமைச்சர் மற்றும் மாகாண அமைச்சருடன் கலந்தாலோசிக்காமல் கல்வியமைச்சு நடந்து கொள்கின்றது.
ஏனைய மாகணங்களுடன் ஒப்பிடுகையில் கிழக்கு மாகாணம் தொடர்பில் கல்வியமைச்சு காட்டும் பாரபட்சம் கிழக்கு மாகாணத்துக்கு செய்யப்படும் வரலாற்றுத் துரோகமாகும். என நான் வருத்ததுடன் தெரிவிக்க வேண்டியுள்ளது.
ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பல தரப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களை முன்னெடுக்க முற்பட்ட போதும் நானளித்த வாக்குறுதியால் அமைதி காத்து வருகின்றனர் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
எனவே, எமது கோரிக்கைகளை கல்வியமைச்சின் செயலாளர் தொடர்ந்தும் உதாசீனப்படுத்தினால் அதன் விளைவுகளை அவரும் கல்வியமைச்சுமே பொறுப்பேற்க வேண்டும் என்பதை இங்கு தெளிவாக கூறுகின்றேன்.
எவ்வாறாயினும் கிழக்கு மாகாண ஆசிரியர் நியமனம் தொடர்பில் நிலையான தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பு முதலமைச்சர் என்ற வகையில் எனக்குள்ளது' என்றார்.
3 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
7 hours ago