2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்களுக்கு அபராதம்

கனகராசா சரவணன்   / 2017 நவம்பர் 01 , பி.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, முகங்காவில் பிரதேசத்தில் சட்டவிரோதமாக கசிப்பு வடித்த இங்குரானையைச் சேர்ந்த இருவருக்கு, தலா 70 ஆயிரம் ரூபாய் வீதம் இருவருக்கும் ஒரு 1 இலச்சத்து 40 ஆயிரம் ரூபாயை அபராதமாக விதித்து, அம்பாறை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டார்.

அம்பாறை தலைமையகப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து, குறித்த
பிரதேசத்தில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைத்து சோதனையின் போது, கசிப்பு வடித்துக் கொண்டிருந்த மேற்படி இருவரும், திங்கட்கிழமை கைது செய்யப்பட்டனர் என்பதுடன், அவர்களிமிருந்து பெரல்கள், கசிப்பு வடிப்பதற்கான உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டிருந்தன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .