2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

‘கடந்த ஆட்சியில் ஊடக சுதந்திரம் மறுக்கப்பட்டது’

Editorial   / 2019 செப்டெம்பர் 10 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சபேசன்

கடந்த ஆட்சியின் போது, நேர்மையான ஊடகவியலாளர்கள், உண்மையை வெளிக்கொண்டுவந்தபோது கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டதனால்  ஊடக சுதந்திரம் மறுக்கப்பட்டிருந்ததாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடிஸ்வரன் தெரிவித்தார்

அந்த நிலையைத் தற்போதைய அரசாங்கம் மாற்றி, ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் சுதந்தரமாகச் செயற்படக் கூடிய நிலையை  ஏற்படுத்தியிருப்பதாகவும், அவர் தெரிவித்தார்.

“அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” செயற்றிட்டத்தின் கீழ், நாவிதன்வெளி அன்னமலை மஹா வித்தியாலயத்தில் 20 மில்லியன் ரூபாய் செலவில் தொழில்நுட்ப அலகுக்கான கட்டடம் திறந்துவைக்கும் நிகழ்வு, அதிபர் என்.பிரபாகர் தலைமையில், நேற்று (09) நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், ஒரு நாட்டில் ஊடகத்துறை மிகவும் பிரதானமானதெனவும் நாட்டின் ஆட்சியைத் தீர்மானிக்கும் வல்லமை ஊடகங்களுக்கு உண்டு எனவும் தெரிவித்தார்.

அவ்வாறான ஊடகங்கள் சுயமாகவும் தன்னிச்சையாகவும் செயற்படமுடியாத நிலை, கடந்த ஆட்சியின்போது இருந்ததாகவும் ஆனால், இன்று எந்த விடயமாக இருந்தாலும்  அச்சமின்றி உண்மையை ஊடகவியலாளர்கள் உலகறியச்  செய்வதுடன், ஊடகவியலாளர்களை நல்லாட்சி அரசாங்கம் பாதுகாப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X