2025 மே 06, செவ்வாய்க்கிழமை

‘கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் ரூ.3,500 மில்லியன் செலவு’

யூ.எல். மப்றூக்   / 2019 ஏப்ரல் 16 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கடந்த வருடம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், சுமார் 3,500 மில்லியன் ரூபாய் செலவு செய்யப்பட்டதாகவும், தேர்தலில் நிதி செலவீடுகள் தொடர்பான சட்டமொன்று உருவாக்கப்பட வேண்டுமென்றும், தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையத்தின் தேசிய இணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்தார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத் துறையின் ஏற்பாட்டில், தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையத்தால் “தேர்தல் பிரசாரத்துக்கான நிதி” தொடர்பான விழிப்புணர்வுப் பயிற்சிப் பட்டறை, கலை, கலாசார பீடத்தின் மாநாட்டு மண்டபத்தில், அண்மையில் இடம்பெற்றது.

இதில் பிரதம வளவாளராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, மேற்படி விடயங்களை அவர் கூறினார்.

ஜனநாயகத்தின் பாதுகாப்பு அரணாகத் தேர்தல்கள் காணப்படுவதாகவும், தேர்தல் தொடர்பாகக் கற்றுக்கொள்வது, ஒவ்வொரு பிரஜைகளாதும் கடமை என்றும் அவர் கூறினார்.

 “அரசியலின் மீதானமக்களின் ஆர்வம் குறைவாக இருப்பதற்கு, நடைமுறை அரசியலில் காணப்படும் முறைகேடுகளே காரணம். நகரத்தையும் கிராமத்தையும் இணைப்பதற்கான பாலமாகத் தேர்தல் அமைய வேண்டும்” என்று தெரிவித்த அவர், மாற்றுத் திறனாளிகள் வாக்களிப்பதில் உள்ள சவால்களையும், நிதி குறைந்தோர் தேர்தலில் போட்டியிடுவதில் உள்ள சிக்கல்களையும் சுட்டிக்காட்டினார்.

வெளிநாட்டில் உள்ள 18-22  இலட்சம் இலங்கை மக்கள் தேர்தலில் வாக்களிக்க முடியாமலிருப்பதை சுட்டிக்காட்டிய மஞ்சுள, சகல பிரஜைகளும் வாக்களிப்பதற்குரிய வாய்ப்பை, நாடாளுமன்றச் சட்டமொன்றின் மூலம் ஏற்படுத்த வேண்டும் என்பதனையும், இதன்போது அவர் வலியுறுத்தினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X