2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கடன் திட்டத்தை அமுல்படுத்துமாறு கோரிக்கை

Editorial   / 2020 ஏப்ரல் 23 , பி.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் பாதிக்கப்பட்டுள்ள அரசாங்க ஊழியர்களுக்கு இலகு தவணை அடிப்படையில் வட்டியற்ற கடன் திட்டத்தினை அமுல்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் யூ.எல்.எம். பைஸர், இன்று (23) தெரிவித்தார்.

இது தொடர்பாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அரசாங்க ஊழியர்கள் பல வழிகளிலும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற நிவாரணங்களோ, மானியங்களோ கிடைப்பதில்லை.

“தற்போதைய காலகட்டத்தில் அரசாங்க உத்தியோகத்தர்கள் பொருளாதார பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளார்கள்.

“இதனைக் கருத்திற்கொண்டு அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு இரண்டு இலட்சம் ரூபாய் கடன் வசதியை ஏற்படுத்தித் தருமாறும், இதனை 40 தவணைகளில் அறவீடு செய்வதற்கு ஆவண செய்யவும்” என அம்மகஜரில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .